பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாதென முன்னர் இருந்த அரசாங்கங்களைக் குற்றம் சாட்டிய தற்போதைய அரசாங்கத்தின் கீழ், பணவீக்கம் 8.5 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
உலகளாவிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஏனைய நாடுகளில் பணவீக்கம் மிகக் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை காலமும் முன்னைய அரசாங்கங்களைத் திட்டினார்கள், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாது என்று. ஏனெனில் அரசாங்கங்கள் கடன் வாங்குகின்றன, பணம் அச்சடிக்கின்றன, இவ்வாறான பிரச்சினை உள்ளதாக கூறினார்கள்.
இப்போது சுயாதீனத்தன்மை கொண்ட மத்திய வங்கிக்குள், அரசாங்கம் பணம் எடுக்காத நிலையில், உபரியையும் வைத்துக்கொண்டு, இவ்வாறு தேவைக்கேற்ப அதிகரிக்காத சந்தர்ப்பத்தில் எப்படி 8.5% பணவீக்கம் உள்ளது?
பணவீக்கம் என்பது பணம் அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சினை என்றுதானே அதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்களைத் திட்டினார்கள்.
எனவே இந்த அரசாங்கம் அதைச் செய்யாத நிலையில், அது எப்படி நடக்கிறது? அப்போது எப்படி நடக்கிறது என்று சொன்னால், சுயாதீன மத்திய வங்கிக்குள் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், பணவீக்கத்தைக் குறைப்பதற்காக வங்கி வட்டி வீதத்தை அதிகரிப்பதன் ஊடாகப் பல பிரச்சினைகள் தோன்றுவதாகக் கூறினார்.
இறக்குமதி வரிகளின் வரி அளவைக் குறைப்பதால் பயனில்லை. இங்கு உற்பத்திச் செலவு அதிகரித்தால். இதில் மின்சாரக் கட்டணம் இருக்கலாம், தண்ணீர், சம்பளங்கள், எரிபொருள் விலை என இவை அனைத்தின் செலவும் அதிகமாக இருந்தால், நாம் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் பொருளின் விலை அதிகரிக்கும்.
இதுதான் இருக்கும் பிரச்சினை. இப்போது வட்டி வீதம் 9% என்று சொன்னால், இது சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்கள் வங்கியிலிருந்து கடன் வாங்கும்போது 15% ஆகவும், 16% ஆகவும் மாறும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி வீதத்தை அதிகரித்து, அதன் ஊடாகப் பணப்புழக்கத்தைக் குறைப்பதன் மூலம் நமது பொருளாதாரத்தைச் சுருக்குவது பாதகமான கொள்கைதானே.இரண்டரை வருடங்களாக இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். அப்போது நாடு எப்படி வளர்ச்சியடையும்? 7%, 8%, 9% வளர்ச்சி வேகம் இருக்கும்போது, இது ஏதோவொரு விதத்தில் சுருங்கத் தொடங்கிய பிறகு, தாங்கிக்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

