மண்ணின் மணத்தையும் வாழ்வியலையும் பிரதிபலிக்கும் ‘மழைக்கால இரவுகள்’ குறுந்திரைப்படம் YouTube தளத்தில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
OSAI Films தயாரிப்பில் உருவான 20 நிமிடங்கள் கொண்ட இக்குறுந்திரைப்படம், கடந்த 25ஆம் திகதி மாலை 6 மணியளவில் ஓரங்கம் (Orangam) YouTube தளத்தில் வெளியிடப்பட்டது.
சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுள்ள இத்திரைப்படம், சுகிர்தன். சீயின் இயக்கத்தில் உருவாகியுள்ளது.
மண்ணின் பண்பாடு, வாழ்வியல் மற்றும் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் இக்குறுந்திரைப்படத்திற்கு வெளியீட்டின் பின்னர் ரசிகர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

