மட்டக்களப்பில் மாவீரர்களின் பெற்றோர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு!

மட்டக்களப்பு சந்திவெளியில் மாவீரர்களின் பெற்றோர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு 25.11.2025 நிதிஸ் செலிபிறேஸன் மண்டபத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

 

​நிகழ்வின் ஆரம்பமாக, சந்திவெளி கண்ணகி ஆலயம் முன்பாக உள்ள பிரதான வீதியிலிருந்து மாவீரர்களின் பெற்றோர்கள் மங்கள வாத்திய இசை முழங்க ஊர்வலமாக விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

 

​தொடர்ந்து மண்டபத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில், மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

​இந் நிகழ்வில் உரையாற்றிய அதிதிகள், மாவீரர்களின் அளப்பரிய தியாகங்களையும், அவர்களைப் பெற்றெடுத்து வளர்த்த பெற்றோர்களின் மகத்துவத்தையும் நினைவு கூர்ந்தனர்.

 

இந் நிகழ்வில் ​இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இளையதம்பி சிறிநாத், ஞானமுத்து சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், மாவீரர்களின் பெற்றோர்கள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *