காரைதீவு கல்விப் பணிப்பாளர் பதவியேற்பு!

திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பார் பணிகளுக்கு மேலதிகமாக இக்கடமைப் பொறுப்புக்கள் வலயக் கல்விப் பணிப்பாளரினால் கையளிக்கப்பட்டது.
காரைதீவு கோட்டக் கல்விப் பணிப்பாளராக முன்பு சிறப்பான பணிகளைச் செய்து காரைதீவு கோட்டத்திற்கு உயர்வுகளை வழங்கிய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ. சஞ்சீவன் அவர்கள் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றதன் காரணமாக இதற்கான ஒழுங்குகளை கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்கள் உடன் மேற்கொண்டு இக்கடமைக்கான அதிகாரரீதியான கடிதத்தினை கையளித்தார்.
முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ. சஞ்சீவன்  அவர்களது சிறப்பான பணிகளை நன்றியோடு பாராட்டும் அதேவேளை, புதிய கோட்டக் கல்விப் பணிப்பாளர்  திருமதி வீ. சாந்தரூபன் (வரணியா) அவர்களை கோட்டத்தின் சார்பாக வாழ்த்தி வரவேற்பதுடன்
அத்தனைக்கும் உரிய ஏற்பாடுகளைச் செய்த கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் அவர்களுக்கும்
காரைதீவு கோட்டத்தின் சார்பாக கல்விச் சமூகத்தினர் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.
கல்முனை கல்வி வலயத்தின் கல்வி நிர்வாக நடவடிக்கைகளை திறம்பட முன்னெடுப்பதில் முக்கிய பங்களிப்புகளை வழங்கி வரும் இவர், பாடசாலைகளின் கல்வி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேம்படுத்துதல், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுடன் ஒருங்கிணைந்து செயற்படுதல், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தமது நிர்வாக ஆற்றலை வெளிப்படுத்தி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *