கிண்ணியாவில் ‘அத்தம’ தூய்மைப் பணியின் நான்காம் கட்டம் முன்னெடுப்பு!

கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கிண்ணியா ரஹ்மானியா பிரதேசத்தில் பிரதான ‘அத்தம’ தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டத்தின் நான்காம் கட்டம் இன்று (28) முன்னெடுக்கப்பட்டது.

 

கிண்ணியா பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனி தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

 

இதில், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம். அஜித், கிளீன் ஸ்ரீலங்கா இணைப்பாளர் அஷ்ரப் இம்ரான், பிரஜா சக்தி தலைவர் ஒழுலுமுதீன் இம்தியாஸ், பிரதேச திட்டமிடல் பணிப்பாளர் ஐ. முஜீப் உள்ளிட்ட அரச அதிகாரிகள், கடற்படையினர், பொலிஸார், சுகாதாரத் துறை மற்றும் பிரதேச செயலக ஊழியர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், பிரஜா சக்தி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

 

இதன்போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொதுச் சுகாதாரம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

 

கிண்ணியாவை தூய்மையான மற்றும் பசுமையான பிரதேசமாக மாற்றும் நோக்கில், பல்வேறு தரப்பினரின் கூட்டுப் பங்களிப்புடன் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *