உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி!

சுவிட்சர்லாந்து ஜெனீவா நகரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.

போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷை, உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தரோவ் எதிர்த்து விளையாடி வருகிறார்.

2 சுற்றுகள் சமநிலையில் முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் 3-வது சுற்று நடைபெற்றது.

கருப்பு காய்களுடன் விளையாடிய குகேஷ் தொடக்கத்திலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நேரக்கட்டுப்பாடடிலும் முன்னிலை பெற்றார்.

அதேவேளையில் ஒரு கட்டத்தில் சிந்தரோவ் நேர நெருக்கடியில் சிக்கினார். இருப்பினும், சிறப்பாகத் தற்காத்துக் கொண்டார்.

5 மணி நேரம் நடைபெற்ற இந்த மோதல் 60 ஆவது நகர்த்தலின் போது சமநிலையில் முடிவடைந்தது.

3 சுற்றுகளின் முடிவில் இருவரும் தலா 1.5 புள்ளிகளுடன் உள்ளனர். இன்று 4ஆவது சுற்று நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *