யாழ்ப்பாணம் – அச்சுவேலியில் ஒரு ஆசிரியை மண்வெட்டியால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, அபான்ஸ் தனியார் நிதி நிறுவன முகாமையாளர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றுமுன்தினம் (22.03.2025) நடந்த இந்த தாக்குதலில், நிதி நிறுவன முகாமையாளரான ஒருவர், ஆசிரியை ஒருவரை மண்வெட்டியால் சராமரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
பாதிக்கப்பட்ட ஆசிரியை அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்த பின்னர் அவரின் தாயாரும், இரண்டு சகோதரிகளும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்
இன்றையதினம் (24.03.2025) இவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்கள்.

