மட்டக்களப்பு மண்முனை பாலத்தினை அண்டிய களப்பு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளங் குடும்பஸ்த்தர் ஒருவரை முதலை பிடித்து இழுத்துச் சென்றுள்ளது.
முதலை பிடித்து இழுத்துச் சென்றவர் காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய அழகுதுரை அழகேசன் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகிறது.
மண்முனை பாலத்தை அண்மித்த பகுதிகளில் தினமும் 100 க்கு மேற்ப்பட்ட மீனவர்கள் பல பகுதிகளிலிருந்தும் வந்து மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் சில ஆண்களும் பெண்களும் ஆற்றுக்குள் தனியாக இறங்கி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
அண்மைக்காலங்களில் இப் பகுதியில் முதலைகளின் நடமாட்டம் குறைந்துள்ள நிலையில் இச் சம்பவம் துரதிஷ்டவசமாக இப்பகுதியில் நேற்றிரவு நடந்தேறியுள்ளமை இப் பகுதி மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.