எதிர்கால சந்ததியினருக்கு எமது வரலாற்றினை மறைக்கும் ஓர் நடவடிக்கையாக, தமிழ் மாணவர்களுடைய வரலாற்றுப் பாடங்களிலிருந்து தமிழ் மன்னர்களின் வரலாறும், அவர்கள் ஆட்சி செய்த இராசதானிகளும் திட்டமிட்டு நீக்கப்பட்டிருகின்றது – சபையில் சிறிநாத் எம்.பி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
மேலும் மேற்குறிப்பிட்ட பாடங்களிலும் சரி, பல்கலைக்கழக உயர் கல்விகளிலும் சரி அந்நிய மொழியின் ஆதிக்கமானது, எம் மொழியினையும், மொழி அறிவின் விருத்தியையும் நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கம் செலுத்தி எமது தமிழ் மொழியின் அழகினை சிதைக்கின்றது.
இவ்வாறு தனது உரையினைத் தொடர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ. சிறிநாத் , மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக, வாகரை, கிரான் மற்றும் செங்கலடி பிரதேசங்களில் வன பரிபாலனத் திணைக்களம் அல்லது வன இலாகாவினால் காணி அபகரிப்புகள், மக்களைத் தொடர்ந்தும் வேதனைக்குள்ளாக்குவதுடன் அச்ச உணர்வையும் ஏற்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தில் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணுவதாகவும் அவ் உயரிய சபையில் மக்களின் குரலாக இவ்வாறு தனது உரையினைத் தொடர்ந்தார்.