வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாஞ்சோலை பகுதியில், சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் நேற்று(22) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர், வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் ஆவார்.
கைதான சந்தேக நபர் மற்றும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 920 சட்ட விரோத சிகரெட்டுகள் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.