கிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் பொன்விளையும் பொத்துவில் பிரதேசத்தில் பாலை வேம்பு ஆலை எழில் கொஞ்சும் அழகிய வயல் வெளிகள் சூழ வீரமரத்தடியில் தனிக்கோவில் கொண்டு நாடி வரும் அடியவர்களுக்கு அருள் வழங்கும் வள்ளல் நாயகன் றொட்டை அருள் மிகு வீரயடிப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ பெருவிழா
கடந்த 22ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ச்சியாக 10 நாட்கள் திருவிழாக்கோலம் பூண்டு எதிர்வரும் 30ஆம் திகதி கங்கா தீர்த்தம் இடம்பெற்று அடுத்த நாளான 31 திகதி 10ஆம் நாள் பைரவர் பூசையுடன் இவ்வாண்க்கான உற்சவ காலத் திருவிழா நிறைவடைய உள்ளது.
மேலும் உற்சவ கால திருவிழாக்கள் மற்றும் பூசை நிகழ்வுகள் யாவும் உற்சவ கால பிரதம குரு விரதிஷ்டா இளவரசன் பிரதிஷ்டா கலாநிதி தற்புருச சிவாச்சாரியார் சிவ. ஸ்ரீ. சன்மூக வசந்தன் குருக்கள் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.
அத்துடன் ஆலய நிகழ்வு யாவும் ஆலய தலைவர் திரு. வசந்தகுமார் தலைமையில் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.