13 வயதுடைய பாடசாலை மாணவன் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு

13 வயதுடைய பாடசாலை மாணவனொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளதாக அம்பலாங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

7 ஆம் தரத்தில் கல்விபயிலும் குறித்த மாணவன் அம்பலாங்கொட பகுதியில் உள்ள அவரது வீட்டில் இவ்வாறு இன்று(27) காலை உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மாணவனின் மரணத்திற்கு மன உளைச்சல் காரணமாக இருக்கலாமென பெற்றோர்கள் தெரிவித்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

அம்பலாங்கொடை பொலிஸார் இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *