இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 70ஆவது போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குறித்த போட்டியில் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதின.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 227 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் சார்பில் ரிஷப் பண்ட் அதிகபட்சமாக 118 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
இந்தநிலையில் 228 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 230 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.
துடுப்பாட்டத்தில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சார்பில் ஜித்தேஷ் சர்மா 85 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
அதேநேரம், இந்த போட்டியில் வெற்றி பெற்ற ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நாளை இடம்பெறவுள்ள முதலாவது தகுதிகாண் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக தெரிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.