மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கன்னன்குடா தொடக்கம் காஞ்சிரங்குடா வரையிலான 8 கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள பெண்களினால் புதுமண்டபத்தடி ஸ்ரீமுருகன் ஆலய முச்சந்தியில் 26.3.2025 இன்று மகளிர் தினம் பொது நிகழ்வு இடம்பெற்றது.
இப் பெண் ஒன்றினைந்து ” எங்களால் முடியும் சேர்ந்து பயணிப்போம் உரிமையை வென்றிடுவோம் ” எனும் மகுடவாக்கியத்துக்கு அமைய தத்தமது ஊர்களில் இருந்து உரிமை, விழிப்புணர்வு தொடர்பான பதாதைகள் ஏந்திய வண்ணம் ஊர்வலமாக வருகை தந்தனர்.
இதில் விழிப்புணர்வு தெரு நாடகம், கவிதைகள், கொத்தணிகள் தொடர்பான அறிமுக உரை போன்ற பல்வேறுபட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன.
அத்தோடு 53 சுய உதவிக்குழுக்களுக்களில் இருந்து 650 க்கு மேற்பட்ட உறுப்பினர்களின் பங்களிப்புடன் கொத்தணிகளின் நெறிப்படுத்தலில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உள்ளூர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.



