இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறையின் ஒத்துழைப்புக்காக இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
குறித்த ஒப்பந்தத்தில் இலங்கையின் சார்பாக விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த அபேசேனவும், சீனாவின் சார்பாக விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் இன் ஹெஜுனும் கையெழுத்திட்டனர்.
இரு நாடுகளும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறையில் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் எனவும், இந்தத் துறையில் உலகளாவிய சவால்களுக்குத் தீர்வுகளைக் கண்டறியும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *