பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு சிறைதண்டனை

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் அவாமி லீக் கட்சித் தலைவர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்த ஆண்டு மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.

 

இது வன்முறையாக மாறியதையடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் திகதி இந்தியாவில் தஞ்சமடைந்தார். அதன் பிறகு அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.

 

இதையடுத்து, சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் ஹசீனா மீது பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளன.

 

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் ஹசீனா ஆஜராக உத்தரவிட்டது.

 

ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

இந்நிலையில், நீதிமன்ற தலைவர் நீதிபதி முகமது குலாம் முர் துசா மஜும்தார் தலைமையிலான 3 பேர் அடங்கிய அமர்வு, நீதி மன்ற அவமதிப்பு வழக்கில் ஹசீனாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி நேற்று தீர்ப்பு வழங்கியது.

 

பங்களாதேஷில் இருந்து தப்பிய பிறகு ஹசீனாவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *