மேஷ ராசி அன்பர்களே! நினைத்த காரியங்கள் நடக்கும் நாள். இணையம் சம்பந்தப்பட்ட தொழில்கள் மேம்படும். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். விறுவிறுப்பாக வியாபாரம் நடக்கும். லாபம் அதிகரிக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் வந்து சேரும். வெளியூர் பயணங்கள் தொழிலுக்கு தேவையான பலனை கொண்டு வரும். உங்களின் பொறுப்பு அலுவலகத்தில் கூடும். பதவி உயர்வுக்கான ஏற்பாடுகள் நடக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும்.
ரிஷப ராசி அன்பர்களே! ஏற்ற இறக்கமான பலன் வந்து சேரும் நாள். உடன் பிறந்தவர்கள் வழியில் கருத்து வேறுபாடு உண்டாகலாம். வியாபாரத்தில் நுணுக்கமாக ஈடுபட வேண்டும். வரவுக்கு தகுந்த மாதிரி செலவு செய்ய வேண்டும். அரசாங்க உதவி தாமதமாக வந்து சேரும். பொறாமையால் வேலை இடத்தில் சங்கடம் உண்டாகலாம். பங்கு சந்தைகளில் அதிக முதலீடு செய்ய வேண்டாம். வெளியூர் பயணங்கள் சிரமத்தை கொண்டு வரும்.
மிதுன ராசி அன்பர்களே! எதிர்பாராத நன்மைகள் வந்து சேரும் நாள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பூர்வீக சொத்தில் இருந்த வில்லங்கம் தீரும். தொழிலில் புதிய மாற்றம் உருவாகும். பண வரவு தேவைக்கேற்ப வந்து சேரும். வேலை இடத்தில் திறமை பாராட்டப்படும்.
கடக ராசி அன்பர்களே! சிறப்பான யோகம் வரும் நாள். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் உண்டாகும். தொழில் எதிர்பாராத லாபத்தை கொண்டு வரும். வியாபாரத்தில் திடீர் வெற்றி உண்டாகும். லாபம் அதிகரித்து கையிருப்பு கூடும். கையில் தாராளமாக பணம் புழங்கும். நினைத்த இடத்தில் வேலை மாறுதல் உண்டாகலாம். ஊதிய உயர்வுக்கான வாய்ப்பு உண்டு. அரசாங்க காரியங்கள் தாமதம் இன்றி நடக்கும். ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.
சிம்மராசி அன்பர்களே! மேன்மையான காரியங்கள் நடக்கும் நாள் இன்று. எதிர்பாராத உதவிகள் வந்து சேரும். அதனால் தன வரவு மேம்படும். நண்பர்களின் உதவி தக்க நேரத்தில் கிடைக்கும். தொழில் விவாதங்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். காப்பீடு மூலமாக பணம் வந்து சேரும். வியாபாரத்தில் அதிரடி லாபம் கிடைக்கும். சுப காரிய நிகழ்ச்சிக்கான ஏற்பாடு நடக்கும். அலுவலகத்தில் சுமூகமான நிலை உண்டாகும். தெற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வரும்.
கன்னி ராசி அன்பர்களே! ஏற்ற இறக்கமான பலன் கிடைக்கும் நாள். வியாபாரத்தில் அதிகமான உழைப்பை போட வேண்டும். தொழிலுக்கு ஏற்படும் மறைமுக எதிர்ப்புகளை களைய வேண்டும். உத்தியோகம் பார்க்கும் இடத்தில் கவனக்குறைவு வேண்டாம். எதையும் சீர்தூக்கிப் பார்த்து செய்ய வேண்டும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். அவசரப்பட்டு கடன் வாங்க வேண்டாம். மேற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வரும். குலதெய்வ அருளால் நல்லது நடக்கும்.
துலாம் ராசி அன்பர்களே! விருப்பப்பட்ட காரியங்கள் நடக்கும் நாள். மனதளவில் திருப்தியான சூழல்கள் உருவாகும். தாய் வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். பணி புரியும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய நபர்களின் நட்பு வியாபாரத்திற்கு உதவி செய்யும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். புதிய பொருட்கள் வாங்கும் நிலை உண்டாகும். வாகன யோகம் சித்திக்கும். தன தானிய லாபம் அதிகரிக்கும்.
விருச்சிக ராசி அன்பர்களே! தாமதம் ஆனாலும் சிறப்பான பலன் கிடைக்கும் நாள். வியாபாரத்தில் சிக்கல்கள் வந்து மறையும். தொழில் துறையில் இருந்த போட்டிகள் விலகும். அலுவலகத்தில் வேலை பளு அதிகரிக்கும். மேலதிகாரிகளின் அனுகூலம் உண்டாகும். பதவி உயர்வு தள்ளிப் போகலாம். சம்பள உயர்வு பேச்சுவார்த்தை நடக்கும் உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குலதெய்வத்தின் அருளால் குறைகள் தீரும்.
தனுசு ராசி அன்பர்களே! நன்மைகள் வீடு தேடி வரும் நாள். புதிய முதலீடுகளால் தொழில் மேன்மையடையும். சிறப்பான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பொருளாதார உயர்வு ஏற்படும். கையிருப்பு கூடும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த காரியம் நடக்கும். வேலை இடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டாகும். மேற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.
மகர ராசி அன்பர்களே! வெற்றிகரமான காரியங்கள் நடக்கும் நாள். தொழிலில் எதிர்பாராத திருப்பம் உண்டாகும். வியாபாரம் செழித்து ஓங்கும். பணவரவு அதிகரித்து திக்கு முக்காட வைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வேலை இடத்தில் மதிப்பு கூடும். பணவரவு அதிகரிக்கும். வேலை மாறுதல் ஏற்படலாம். பேச்சு வன்மை காரிய வெற்றியை கொண்டு வரும். புதிய நண்பர்கள் அறிமுகம் கிடைக்கும். தெற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வரும்.
கும்ப ராசி அன்பர்களே! நல்ல காரியங்கள் நடக்கும் நாள். தொழிலுக்கு மறைமுக எதிர்ப்பு உண்டாகும். அது சாமர்த்தியமாக களையப்படும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். மந்தமான வியாபாரம் சுறுசுறுப்பாகும். தேவையில்லாத செலவுகள் ஏற்படலாம். இருந்தாலும் கட்டுக்குள் இருக்கும். வேலை இடத்தில் தடுமாற்றம் உண்டாகலாம். அக்கறையான நடவடிக்கையில் மேலதிகாரிகளின் அனுதாபம் கிடைக்கும். சுபச் செலவுகள் உண்டாகும்.
மீன ராசி அன்பர்களே! உயர்வான காரியங்கள் நடக்கும் நாள். நீங்கள் திட்டம் போட்ட செயல் தடையில்லாமல் நடக்கும். வியாபாரத்தில் ஏற்படுத்திய நுட்பங்கள் பலன் கொடுக்கும். லாபம் அதிகரிக்கும். உங்கள் பேச்சு செல்வாக்கை கொண்டு வரும். அரசியல் வட்டாரத்தில் பழக்கம் ஏற்படும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யப்படும். எதிர்ப்புகள் மறைந்து போகும். பதவி உயர்வு கிடைக்கலாம். விருப்பப்பட்ட வேலை மாறுதல் உண்டாகும். மேற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும்.

