உள்ளூராட்சி விவகாரங்கள் தொடர்பான சட்ட இயலளவு அபிவிருத்தி செயலமர்வு

கிழக்கு சமூக அபிவிருத்தி மன்றம் மற்றும் கிழக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் உள்ளூராட்சி விவகாரங்கள் தொடர்பான சட்ட இயலளவு அபிவிருத்தி செயலமர்வு மட்டக்களப்பு கிரீன் கார்டன் ஹோட்டலில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திரு. ஏ. எல். எம். அஸ்மி தலைமையில் இடம்பெற்றது.

 

இச்செயலமர்வில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் முதல்வர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், மாநகர சபை ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இதில் உள்ளூராட்சி மன்ற முதல்வர்களின் வகிபாகங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டது.

 

மேலும் கிழக்கு சமூக அபிவிருத்தி மன்றத்தினால் இலங்கையின் உள்ளக ஆட்சிப் பொறிமுறைகளில் நலிவுற்ற சமூகக் குழுக்களின் அரசியல் உள்ளடக்கம் மற்றும் சமூகப் பிரச்சனைகள் குறித்த பரப்புரைப் பத்திரம் எனும் தலைப்பிலான மகஜர் ஒன்று அனைத்து உள்ளூராட்சி மன்ற முதல்வர்களுக்கும் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *