யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக வழங்கப்பட்டது.
இன்று காலை 10.00 மணி அளவில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி பகிர்ந்து அளிக்கப்பட்டது.
கடந்த 2009 ஆம் ஆண்டு இதே போன்றொருநாளில் முள்ளிவாய்க்கால் பகுதியில் எமது உறவுகள் கொத்துக் கொத்தாக செத்து மடிந்த நாளினை நினைவு கூறும் வகையிலும் அன்று கஞ்சி தான் நமது எஞ்சியவர்களை காத்தது என்பதை நினைவுகூரும் வகையில் இந் நினைவுக்கஞ்சி வழங்கப்பட்டது.

