மன்னாரில் 19ஆவது நாளாக இன்றும் சுழற்சி முறையில் கவனயீர்ப்பு போராட்டம்

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிம மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக தொடர்ந்து வரும் கவனயீர்ப்பு போராட்டம் 19ஆவது நாளாக இன்றும்(21) சுழற்சி முறையில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த போராட்டம், மன்னார் நகர சுற்றுவட்டப் பகுதியில் இடம்பெற்று வருகிறது.

இந்த போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்து சங்க உறுப்பினர்கள் மற்றும் மன்னார் முச்சக்கரவண்டி சங்கத்தினர் ஆதரவு வழங்குவதோடு, அவர்கள் போராட்டத்திலும் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *