60 வருடங்களுக்குப் பின்பு புதிதாக அமைக்கப்பட உள்ள மட்டக்களப்பு மாவட்ட அரச கால்நடை வைத்திய அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று காலை கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் எம்.ஏ.எம். சுல்பிகா அபூபக்கர் தலைமையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரச கால்நடை வைத்திய அலுவலகத்திற்கான புதிய கட்டிடமானது சுமார் 40 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட உள்ளது. இதில் ஊழியர்களுக்கான விடுதி வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட ஆளுநரின் இணைப்பாளர் அப்துல்லா கலந்து கொண்டதுடன் பிரதம அதிதியாக விவசாய அமைச்சின் செயலாளர் அஸ்வின் கலந்து கொண்டு அடிக்கலினை நாட்டி வைத்தார்.
இதில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பணிப்பாளர் டொக்டர் எம் ஏ ஹதி, மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வைத்தியர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மிக நீண்ட நாள் தேவையாக இருந்து வந்த இந்த கட்டிட நிர்மாமானது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் தற்போது நிறுவப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தி கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.


