தேர்தல் தொடர்பாக மக்களுக்குள்ள தடை தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல்

தேர்தல் தொடர்பாக மக்களுக்குள்ள தடை தொடர்பாக ஆராயும் வடமாகாணத்திற்கான கலந்துரையாடல் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் தனியார் விருந்தகம் ஒன்றில் இன்று நடைபெற்றது.

 

குறித்த கலந்துரையாடலில் முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகமும் தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினருமான எம்.எம்.முகமட் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினார்.

 

குறித்த கலந்துரையாடலில் மாற்றுத் திறனாளிகள், சிவில் அமைப்புக்களைச் சேர்ந்தோர் என பலரும் கலந்து கொண்டனர்.

 

முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகமும் தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினருமான எம்.எம்.முகமட் கருத்து தெரிவிக்கையில், மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்படுவதாக இருந்தால் பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்தார்.

 

கலப்பு முறையிலா அல்லது விகிதாசார முறையிலா தேர்தல் நடாத்தப்படவேண்டும் என பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *