கிளிநொச்சி மாவட்டத்தில் செயற்படும் தொழிற்பயிற்சி நிலைய உத்தியோகத்தர்களுக்கும் தொழிற்கல்வி பிரதியமைச்சர் நளின் ஹேவகேக்கும் இடையிலான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், மாவட்ட அரசாங்கதிபர் முரளிதரன், மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் காணி அஜிதா பிரதீபன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்ந தலைவரின் இணைப்பாளர் மருங்கன் மோகன், ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலைய அதிபர், மாவட்ட தொழிற்பயிற்சி நிலையப் பொறுப்பதிகாரி, கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர், கிளிநொச்சி வடக்கு மற்றும் தெற்கு வலயக்கல்விப்பணிப்பாளர்கள் மற்றும் உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், தொழிற்பயிற்சி நிலையங்களில் கற்பிக்கும் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


