செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள புதைகுழிக்கு நீதி வேண்டியும் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி வேண்டி தமிழ் கட்சிகள் ஒன்று சேர்ந்து முன்னெடுத்துள்ள கையெழுத்து போராட்டம் நான்காவது நாளாக இன்று(01) கிளிநொச்சியில் பூநகரி வாடியடியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சமத்துவக் கட்சியின் செயலாளர் நாயகம் சந்திரகுமார் தலைமையில் கையெழுத்து பெறும் நடவடிக்கையானது இன்று முன்னெடுக்கப்பட்டது.


