அரசாங்க நிறுவனங்களில் ஒழுங்கமைப்பை பேணுவதற்காக “செயிரி வாரம்’ ஆரம்பம்

க்ளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக அரசாங்க நிறுவனங்களின் ஒழுங்கமைப்பை பேணுவதற்காக “செயிரி வாரம்’ ஆரம்பமாகியது.

 

பொது நிருவாக,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் சுற்றுநிருபத்திற்கு அமைய 2025.09.01 தொடக்கம் 2025.09.04 திகதி வரை ஒவ்வொரு நாளும் காலை இரண்டு மணித்தியாலயங்கள் கட்டிடங்களுக்கு உள்ளேயும் வெளியேயும், கட்டிடங்களின் வெளிப்புற சூழலையும் நன்கு பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

 

எனவே அதற்கமைவாக, கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் உட்பிரிவுகள் முதல் நாளான இன்று(01)சுத்தம் செய்யப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *