தேசிய அரசியலில் முன்மாதிரிமிக்க மனிதராக இன்று பார்க்கப்படும் சாலி முஹம்மது நளீம் ஏறாவூர் மண்ணுக்கு கௌவரம் சேர்த்துள்ளார்.
ஏறாவூர் அரசியலில் கணிசமான பங்கு முஸ்லிம் காங்கிரஸுக்கும் இன்றைய தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இருக்கிறது.
கட்சியின் முக்கிய தவிசாளர், பிரதித்தலைவர் பதவி என ஏறாவூர் மண்ணுக்கு கொடுத்து அழகு பார்த்தார். அரசியலதிகாரம் என்ற அடிப்படையில் தேர்தலில் தோல்வியை ஏறாவூர் மண் தழுவிய போது, பல தடவைகள் தேசியப்பட்டியலூடாகவும் அதிகாரங்களைக் கொடுத்தார்.
தற்போது தன்னிடம் வழங்கப்பட்ட அமானிதத்தை மூன்று மாத காலங்கள் பாராளுமன்றத்தில் மக்களின் குரலாக மட்டு.மாவட்டத்திற்கு வெளியிலுள்ள மக்களின் பிரச்சினைகளையும் பாராளுமன்றத்திற்கு கொண்டு சென்று குரல் கொடுத்தது மாத்திரமின்றி, முஸ்லிம் விரோதக்கருத்துக்கள் பாராளுமன்றத்தில் பேசப்பட்ட போது, துணிந்து எதிர்த்து பதிலடி கொடுத்தவர்.
பிரதேசவாதம் தலைதூக்கியிருக்கும் அரசியலில் தனது பண்பாடு, ஒழுக்கம், சகல பிரதேச மக்களோடும் சகஜமாகப்பழகி, அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதும் அவர்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் பேசியதனூடாகவும் மனங்களை வென்று இவர் இன்னும் பாராளுமன்றத்தில் இருக்கக்கூடாதா? என்று அங்கலாய்க்கும் நிலையைத் தோற்றுவித்து விடைபெற்றுச்சென்று விட்டார்.

