பிள்ளையார் கோவில் வீதி அபிவிருத்தி; தவிசாளர் தலைமையில் அடிக்கல் நடும் வைபவம்

கிழக்கு மாகாண சபை பிஎஸ்டிஜி திட்டத்தினூடாக நிதியொதுக்கீட்டின் மூலம் ஏறாவூர் நகர சபை எல்லைக்குட்பட்ட பிள்ளையார் கோவில் வீதி கொங்கிறீட் வீதியாக மாற்றம் செய்யப்படவுள்ளது.

ஏறாவூர் நகரசபை தவிசாளர் அல்ஹாஜ் எம்.எஸ். நழீம் தலைமையில் நேற்று(05) அடிக்கல் நடும் வைபவம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதி தவிசாளர் ஞா. கஜேந்திரன், உறுப்பினர்களான எம்.யூ. கரீம் றஹ்மான், எஸ். ரகுபரன், ஏ. எம். அஸ்மி, என். சுதாகரன், ஏ.எம் உவைஸ் அல் ஹபீழ், ஆர். பிரபா, தொழிநுட்ப உத்தியோகத்தர் சுரேஷ், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அப்பகுதி வாழ் பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் அடிக்கல் நட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *