பொத்துவில் ஊரணி சரஸ்வதி மகா வித்தியாலத்திற்கு மடிக்கணிணி வழங்கி வைப்பு

அம்பாறை மாவட்டம் பொத்துவில் ஊரணி சரஸ்வதி மகா வித்தியாலயத்திற்கு முன்னாள் பொத்துவில் பிரதேச சபை உப தவிசாளரும் சமுக செயற்பாட்டாளருமான திரூ. பெ. பார்த்திபனின் ஏற்பாட்டில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் இன்ஃபர்மேடிக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அமைப்பின் ஊடாக 10 மடிக்கணிணிகள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வானது பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றதுடன் குறித்த பாடசாலையில் கணிணி ஆய்வு கூடமும் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பாடசாலை அதிபர் திரு.ஐ.மோகன்ராஜ், பாடசாலை ஆசிரியர் மற்றும் மாணவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *