புதுக்குடியிருப்பில் வீதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் நேற்று(06) மாலை 7 மணி அளவில் யாழ்ப்பாணத்திலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும் வீதியைக் குறுக்கறுத்துச் செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ் விபத்தில் காயமடைந்து மோட்டார் சைக்கிளில் தூக்கி வீசப்பட்ட நபர் மீது வீதியால் பயணித்த மற்றுமொரு வாகனம் ஏறிச் சென்றதன் காரணமாக ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்.
புது குடியிருப்பு ஒன்பதாம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய சந்திரமோகன் சானுசன் என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
காயமடைந்தவர்  தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக புது குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *