1996 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் கல்வி கற்ற மாணவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட கிளிநொச்சி சாதாரண தர அமைப்பின் ஏற்பாட்டில் 2025 ஆம் ஆண்டு ஒன்று கூடலும் மாணவர்களை கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வானது நேற்று(06) காலை 10.20 மணியளவில் இன்னிய தமிழ் பாரம்பரிய கலைவாத்தியங்களுடன் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு அமைப்பின் கீதங்கள் இசைக்கப்பட்டு, மங்கள விளக்கேற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் 2025 ஆம் ஆண்டு கல்வி உயர்தரத்தில் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களையும், விழிப்புணர்வற்றவர்களுக்கான டிஜிட்டல் முறையிலான வெள்ளைப் பிரம்புகளைக் கண்டுபிடித்த மாணவனையும் சாதனையாளர்களுக்கு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரால் மதிப்பளிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக 96 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் கல்வி கற்ற மாணவர்களில் ஒருவரான பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவனும், மாவட்டத்தின் இரண்டு கல்வி வலயங்கள் சார்ந்த வலயக் கல்வி பணிப்பாளர்களும், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் மற்றும் கிளிநொச்சி சாதாரண தர அமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


