மட்டக்களப்பு பிரதி பொலிஸ்மா அதிபர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இடமாற்றம்

மட்டக்களப்பு மாவட்ட  பிரதி பொலிஸ்மா அதிபர் நுவன் மெண்டிஸ், இரு உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி ஒருவர் உட்பட 4 பேர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொலிஸ் ஆணைக்குழுவின் இடமாற்ற அனுமதியையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றப்பட்ட நுவன் மெண்டிஸ் மீண்டும் கொழும்புக்கு நேற்று முன்தினம் உடனடியாக இடம்மாற்றப்பட்டுள்ளார்.

அதேவேளை வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றி வந்த பிரியந்த மற்றும் களுவாஞ்சிக்குடி உதவி பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றி வந்த பண்டார இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை ஆயித்தியமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்த பொலிஸ் பரிசோதகர் தென்னிலங்கை பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *