அபிவிருத்தி உத்தியோகத்தவர்களாக பாடசாலையில் நியமிக்கப்பட்டிருக்கும் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குமாறு கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று(08) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டமானது இலங்கை பட்டதாரி ஒன்றினத்தின் ஏற்பாட்டில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
நாங்கள் கற்பித்து பெறுபேறு வரவில்லையா, போட்டிப்பரீட்சை மட்டும் தான் தகுதியா, பட்டம் பெற்றும் ஏன் எங்களை மட்டம் தட்டுகிறீர், ஆசிரியர் பணிக்கு அமர்த்த முடியும் எனில் ஆசிரியர் நியமனம் வழங்க முடியாதா மற்றும் ஐந்து வருடத்தில் பாடசாலை அனுபவம் போட்டிப் பரீட்சை ஏனோ போன்ற பதாகைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


