மட்டக்களப்பு திருமலை வாகரை வீதியில் நேற்று(08) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னார் பகுதியில் இருந்து வாகரை வீதி வழியாக ஏறாவூர் நோக்கி சென்ற கனரக லொறியானது காயன்கேணி எனும் இடத்தில் முன்னால் சென்ற முற்சக்கர வண்டியுடன் மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் நெல் லொறியானது பாதையை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்திற்குள்ளாகியதுடன் அதில் பயணம் செய்த நடத்துனர் காயமடைந்துள்ளார்.
அத்துடன் முற்சக்கர வண்டி சாரதி உட்பட முற்சக்கர வண்டியில் பயணம் செய்த மேலும் ஒருவர் காயமுற்ற நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பாக வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


