சுவிட்சர்லாந்து அல்வாய் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 08ஆவது விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வும் உதைபந்தாட்ட இறுதிப்போட்டியும் கடந்த 05ஆம் திகதி அன்று மாலை 4:00 மணியளவில் மாலுச்சந்தி மைக்கல் விளையாட்டுக்கழக மைதானத்தில் பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக் தலைவர் மாரிமுத்து நவநீதமணி தலைமையில் இடம்பெற்றது.
பெரும் திரளான ரசிகர்கள் மத்தில் பரபரப்பான உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் அல்வாய் மனோகரா அணியை எதிர்த்து அல்வாய் நண்பர்கள் அணி மோதியது.
இப்போட்டியில் அல்வாய் மனோகரா அணி 04:02 என்ற கோல் கணக்கில் அல்வாய் நண்பர்கள் அணி வீழ்த்தி சம்பியனாகியது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத்தலைவர் சிறீதரன் கலந்து சிறப்பித்தார்.
அத்துடன் பாலன் முகுந்தன் (பணிப்பாளர் விளையாட்டுத் திணைக்களம், வடக்கு மாகாணம்), வரதராசன் மனோராஜ் (தலைவர், வடமராட்சி உதைபந்தாட்ட நடுவர் சங்கம்), முகுந்தன் (செயலாளர், வடமராட்சி உதைப்பந்தாட்ட லீக்), கஜகோபன் (இலங்கை உதைப்பந்தாட்ட அணி வீரா்), அருளானந்தசோதி (செயலாளர், பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக்), யா/அல்வாய் சின்னத்தம்பி வித்தியாலய அதிபர் கிட்டிணன் சிறீகாந்தராசா, பிரித்தானியா வாழ் வர்த்தகர் தங்கவேலாயுதம் சிவகுமார் மற்றும் அல்வாய் இந்து வாலிபர் சங்கத்தின் தலைவர் தங்கராசா சிவனேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


