38 ஆவது படைப்பிரிவின் புதிய கட்டளை அதிகாரியாக மேஜர் கே.எம் தமீம் பொறுப்பேற்பு

மட்டக்களப்பு தேசிய மாணவர் படையணியின் 38 ஆவது படைப்பிரிவின் புதிய கட்டளை அதிகாரியாக மேஜர் கே.எம் தமீம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள 38 ஆவது மாணவர் படையணி காரியாலயத்தில் தனது கடமையை பொறுப்பேற்ற அவர்  வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இப்பதவிக்கு தமிழ் பேசும் அதிகாரி ஒருவராக நியமிக்கப்பட்டிருப்பது வரலாற்றில் இதுவே முதற் தடவையாகும்.

இந்நிகழ்வில் படைப்பிரிவின் அதிகாரிகள், நிரந்தர உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு பொலிஸ் அதிகாரிகள், கல்முனை கடற்படை பிரிவின் கடற்படை அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *