தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புன்னைநிராவி பகுதியில் வசிக்கும் மோகனபவன் வனிதா எனும் குடும்பப் பெண் கடந்த 09ஆம் திகதி அன்று உறவினருடன் மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலைக்கு சென்ற பொழுது திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது சிகிச்சைப் பலனின்றி நேற்று(11) உயிரிழந்துள்ளார்.
புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் மோகன பவன் வனிதா என்னும் 40 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை இன்று கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம் திசாநாயக தெரிவித்துள்ளார்.

