கிளிநொச்சியில் விபத்து; பாடசாலை மாணவர் படுகாயம்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையம் முன்பாக உள்ள ஏ9 வீதியில் பாடசாலையில் இருந்து மோட்டார் சைக்கிளில் பிள்ளையை ஏற்றிக்கொண்டு டிப்போ சந்திப் பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில் அதே பகுதியில் இருந்து  பரந்தன் இருந்து வவுனியா நோக்கி சென்ற டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் மோதி விபத்தை ஏற்படுத்துள்ளது.

 

இன்று(12) நண்பகல் 12.45 மணியளவில் பாடசாலையிருந்நு பிள்ளையை ஏற்றிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் பின் பகுதியில் மோதிய மோட்டார் சைக்கிள் பயணித்த பாடசாலை மாணவர் ஒருவர் காயத்துடன் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகன சாரதி தப்பி செல்ல முற்பட்ட வேளையில் வீதியால் சென்ற பொதுமக்கள் டிப்பர் சாரதியை மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *