யாழில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ரசிக்க குமார தலைமையில் 52 ஆவது படைப்பிரிவின் படைத் தளபதியின் ஏற்பாட்டில் 523 ஆவது படைப்பிரிவின் ஒருங்கிணைப்பில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று(12) காலை 9.00 மணிக்கு தென்மராட்சி கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் ரீடிஎம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் தேமிய அன்ரனி த மெல்லின் நிதி ஒதுக்கீட்டில் 5 இலட்சம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் 52 ஆவது படைப் பிரிவினர், 523 ஆவது படைப் பிரிவினர், தென்மராட்சி பிரதேச செயலாளர், தென்மராட்சி கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர், முத்துக்குமாரசுவாமி மகா வித்தியாலயம் மற்றும் விடத்தற்பளை கமலாசினி வித்தியாலய அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *