திருக்கோவில் தாண்டியடி விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் இலவச மருத்துவ முகாம்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாபெரும் இலவச மருத்துவ முகாம் நேற்று(14) திருக்கோவில் தாண்டியடி விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு. எச். ஈ. எம். டபள்யூ. டி. திசாநாயக்க கலந்து சிறப்பித்தார்.

இதில் விசேட வைத்திய நிபுணர்களின் சேவைகள், பல் மருத்துவ சேவை, தொற்று நோய் மற்றும் தொற்றா நோய் பரிசோதனைகள், சுகாதாரக் கல்வி உட்பட விழிப்புணர்வு நிகழ்வுகள், அத்துடன் பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு மூக்குக்கண்ணாடி வழங்குதல், பரிந்துரைக்கப்பட்ட நபர்களுக்கு காது கேட்கும் கருவி வழங்குதல், விசேட தேவையுடையவர்களுக்கு சக்கர நாற்காலிகள், நடைப் பயிற்சி கருவிகள் வழங்குதல் என மேலதிகமாகவும் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டன.

குறிப்பாக திருக்கோவில், ஆலையடிவேம்பு மற்றும் பொத்துவில் பிரதேசத்தில் உள்ளடக்கியவாறு குறித்த நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *