பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் அனைத்து உள்ளுராட்சி நிறுவனங்களையும் மையமாகக் கொண்டு 2025 செப்ரம்பர் 15-21 ஆம் திகதி வரை வளமான நாடும் அழகான வாழ்க்கையும் எனும் எண்ணக் கருவில் மறுமலர்ச்சி நகரம் எனும் தொனிப் பொருளில் உள்ளுராட்சி வாரம் இன்று வாகரை கதிரவெளி பொது நூலகத்தில் இடம்பெற்றது.
கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை தவிசாளர் க.தெய்வேந்திரன் தலைமையில் இன்றைய நிகழ்வுகள் நடைபெற்றன.
இன்றைய நிகழ்வானது வாகரை பிரதேச மக்களது நலன் கருதி பிரதேச சபையில் நீண்ட காலமாக தீர்க்க முடியாத அலுவலக விடயங்களை இலகுவாக தீர்க்கும் வகையில் நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டது.
வியாபார அனுமதிப் பத்திரம், கட்டட விண்ணப்ப பத்திரம் வீதி எல்லைச் சான்றிதழ் என்பன வழங்கப்பட்டன.
கிராம அபிவிருத்தி முன்மொழிவுகள் பெறப்பட்டன.
பொது முறைப்பாடுகள் என்பன ஏற்றுக் கொள்ளப்பட்டன.

