இராமநாதபுரத்தில் வெடிக்காத நிலையில் செல் இனங்காணப்பட்டுள்ளது

இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 10 வீட்டு பகுதியில் யுத்த காலத்தில் 1990 ஆண்டுக்கால பகுதியில் இராணுவத்தினால் ஏவப்பட்ட வெடிக்காத நிலையில் பீப்பாய் செல் ஒன்று இராமநாதபுரம் 10 வீட்டுப் பகுதியில் தனியார் காணி உரிமையாளர் ஒருவரது காணியினை துப்பரவுப் பணி மேற்கொண்ட பொழுது வெடிக்காத நிலையில் இடங்காணப்பட்டுள்ளது

 

இச்சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக இராமநாதபுரம் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டதுடன் தற்பொழுது கிளிநொச்சி நீதிமன்ற நீதவனின் அனுமதியுடன் செயல் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவு அப்பகுதியில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் இராமநாதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *