நடைபெறவிருக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பு நிலையம் மற்றும் வாக்கெண்ணல் நிலையத்தில் கடமையாற்றவுள்ள சிரேஷ்ட தலைமைதாங்கும் உத்தியோகத்தர்கள் மற்றும் வட்டார உதவித் தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கான தெளிவூட்டல் கலந்துரையாடல் இன்று(29) பி.ப 2.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த தெளிவூட்டல் கலந்துரையாடலானது வாக்க்களிப்பு மற்றும் வாக்கெண்ணல் நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் கடமை மற்றும் பொறுப்புக்கள் பற்றி தெளிவான முறையில் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் திருமதி எஸ்.சிந்துசாவால் தெளிவுபடுத்தப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன், வட்டார உதவித் தெரிவத்தாட்சி அலுவலகர்கள் மற்றும் சிரேஷ்ட தலைமைதாங்கும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


