கண்டி மாவட்டம், கம்பளை கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப்பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரி ரட்னசாமி விஜேந்திரன் கடமைகளை நேற்று பொறுப்பேற்றார்.
புசல்லாவை இந்து தேசிய கல்லூரி அதிபராக சேவையாற்றிய இவர், கடந்த இரு வருடங்களாக ஹட்டன் கல்வி வலயத்தின் பணிப்பாளராக பதவி வகித்தார்.
இக்காலப்பகுதியில் ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகள் சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதற்குரிய தலைமைத்துவத்தை வழங்கினார்.
கம்பளை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிபர்களும், ஆசிரியர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அவரின் வருகையானது கம்பளை கல்வி வலயத்திலுள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு புத்தெழுச்சி ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.


