கடற்றொழில் நிறுவனங்கள் இலாபத்தில்; எதிர்க்கட்சிக்கு அமைச்சர் பதிலடி!

இலங்கையின் கடற்றொழில் துறையின் ஏற்றுமதி வருமானத்தை 2030ஆம் ஆண்டளவில் 700 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாக உயர்த்துவதற்கு அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் இன்று (27) பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அரசாங்கம் பொறுப்பேற்றபோது 285 மில்லியன் டொலராகக் காணப்பட்ட ஏற்றுமதி வருமானம் தற்போது 320 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், கடற்றொழில் துறையின் அபிவிருத்திக்காக 2027ஆம் ஆண்டுக்கு 24,024.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மீன்பிடித் துறைமுகங்கள், இறங்குதுறைகள் மற்றும் மீன் சந்தைகளை நவீனமயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளுக்குத் தீர்வு காண எதிர்வரும் ஜனவரி 22ஆம் திகதி இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *