அம்பாறை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க மாவீரர் துயிலும் இல்லமான கஞ்சிகுடிச்சாற்றில், மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
கார்த்திகை 27ஆம் திகதியான இன்று, இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
அந்தவகையில், கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாலை நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில், மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது, உணர்வுபூர்வமாக மாவீரர்கள் நினைவுகூரப்பட்டனர்.

