நுவரெலியாவில் குடியிருப்புக்குள் வெள்ள நீர் உட்புகுந்ததால் மக்கள் அசௌகரியம்

நேற்று மாலை(19) வேளையில் நுவரெலியாவில் பெய்த மழை காரணமாக நுவரெலியா மாநகர சபை எல்லைக்குட்பட்ட ஹாவாஎலிய குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் உட்புகுந்ததால் மக்கள் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

 

இவ்வாறு அடிக்கடி நுவரெலியாவில் மழை பெய்யக்கூடிய நிலையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வீதிக்கு முன்னால் இருக்கக்கூடிய இப்பகுதி மக்களின் வீடுகளுக்குள் வெள்ளநீர் அடிக்கடி இவ்வாறு உட்புகுவதால் உடமைகள் மற்றும் பொருட்கள் சேதமடைவதாக தெரிவிக்கின்றனர்.

 

இந்த விடயம் சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்திருந்த போதும் இதுவரையான காலப் பகுதியில் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

 

இவ்வாறு சிறிய அளவிலான மழை பெய்யும் போது கூட இவ்வாறான நிலை தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *