இந்தியன் பிரீமியர் லீக் தொடர்; பெங்களூர் அணி 100 ஓட்டங்களால் வெற்றி

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிராக இன்று(01) ஜெய்ப்பூரில் இடம்பெற்ற போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 100 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

 

ஐபிஎல் தொடரின் 50ஆவது லீக் போட்டியாக இடம்பெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

 

அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 217 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

 

அவ்வணி சார்பாக ரியான் ரிக்கெல்டன் 61 ஓட்டங்களையும் ரோஹித் சர்மா 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

 

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் பந்துவீச்சில் மஹீஷ் தீக்‌ஷன மற்றும் ரியான் பராக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.

 

இதனைத் தொடர்ந்து 218 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 16.1 ஓவர்களில் 117 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

 

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சார்பாக ஜொப்ரா ஆச்சர் மாத்திரம் 30 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

 

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சில் ட்ரென்ட் போல்ட் 3 விக்கெட்டுக்களையும் ஜஸ்பிரிட் பும்ரா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

 

இந்த வெற்றியின் ஊடாக மும்பை இந்தியன்ஸ் அணி 14 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

 

இதேவேளை, இந்த தோல்வியின் ஊடாக சென்னை சுப்பர் கிங்ஸிற்கு அடுத்ததாக 2025 ஐ.பி.எல் தொடரில் ப்ளே ஒப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வௌியேறும் இரண்டாவது அணி ராஜஸ்தான் ரோயல்ஸ் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *