மன்னார் மாவட்டத்தில் உள்ளூர் உற்பத்தியாளரின் உற்பத்தி முயற்சியை ஊக்குவிக்கும் முகமாக எழுத்தூர் செல்வநகர் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட உள்ளூர் உற்பத்தியாளரின் “சுஜி ஸ்பைசி ஃபுட்ஸ் (பிரைவேட்) லிமிடெட்”, தொழிற்சலையை இன்று(25) மன்னார், மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கனகேஸ்வரனால் சம்பிரதாய முறைப்படி திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சமயத்தலைவர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற உத்தியோகத்தர்களும், உள்ளூர் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

