மன்னார், அடம்பன் – வட்டக்கண்டல் பகுதியில் புதையல் தோண்டிய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று(20) மதியம் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
மன்னார் பிரிவு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினருக்குக் கிடைத்த, இரகசியத் தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
புதையல் என சந்தேகிக்கப்படும் கல் ஒன்றை இந்திய நாட்டவருக்கு 300 மில்லியன் ரூபாய்க்கு விற்க முற்பட்டபோது, ஐந்து சந்தேக நபர்களையும் இந்திய நாட்டவர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
மேலும் இது தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விடுதியொன்றில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.

