யாழில் நான்கு பிள்ளைகளின் தந்தை அடித்துக் கொலை

யாழ்ப்பாணம், அச்செழு பகுதியில் உள்ள கள்ளுத் தவறணை ஒன்றில் ஏற்பட்ட மோதல் காரணமாக, நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை புன்னாலைக் கட்டுவனில் உள்ள கள்ளுத் தவறணைக்குக் குறித்த குடும்பஸ்தர் கள்ளு அருந்தச் சென்றபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கள்ளு அருந்திக் கொண்டிருந்த இரு இளைஞர்கள், 56 வயதுடைய அந்தக் குடும்பஸ்தரைத் தாறுமாறாகத் தாக்கியுள்ளனர்.

படுகாயமடைந்த அவர் உடனடியாகத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *